ADDED : டிச 11, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சட்டசபை பொது தேர்தல் 2026 தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்ற மின்ணணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று(டிச.11) முதல் நடைபெறவுள்ளது. தினமும் காலை 9:00 மணிக்கு துவங்கி இரவு 7:00 மணி வரையில் நடைபெறும் இப்பணிகளை மேற்கொள்வதற்கு 9 பெல் நிறுவன மின் பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, தேர்தல் பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

