/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் கல்லுாரியில் கருத்தரங்கம்
/
நத்தம் கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : டிச 11, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜாராம் தலைமை வகித்தார். குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் ஈஸ்வரி, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மகாலெட்சுமி, வரலாற்றுத்துறை பேராசிரியை உஷா, அறிவியல் துறை தலைவர் சுகன்யா முன்னிலை வகித்தனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், வன்முறை காலங்களில் தங்களை தற்காத்து கொள்வது பற்றி விளக்கப்பட்டது. ஆங்கிலத்துறை ஆசிரியை அத்திபா, கல்லுாரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

