நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே வாடகைக்கு வீடு பிடித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீஹாரைச் சேர்ந்த சந்தன்பாயை 30, இரண்டரை கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தனர்.
வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோட்டில் சுள்ளெறும்பு பகுதியில் சந்தன்பாய் தனியாக வாடகைக்கு வீடு பிடித்து தங்கியிருந்தார். மேலும் அவர் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார்.
எஸ்.ஐ., பாலசுப்பிரமணி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்து அவரை கைது செய்தனர். அவர் வீட்டில் வைத்திருந்த இரண்டரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

