ADDED : செப் 30, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் பழநி ரோடு ராமையன்பட்டி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது திண்டுக்கல் என்.ஜி.ஓ.,காலனியை சேர்ந்த விக்னேஷ்28,குட்டத்துப்பட்டி வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த தம்பிதுரை35,என இருவர் அப்பகுதியில் கஞ்சா விற்றது தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.