ADDED : ஆக 22, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
செந்துறை, ஆக.23
செந்துறை குரும்பபட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள், யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து செவ்வாடை அணிந்த பெண்கள் கஞ்சி கலயம், முளைப்பாரியை தலையில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக அய்யப்பன், கருப்பசாமி, முத்தாலம்மன், சந்தைப்பேட்டை விநாயகர், முருகன், குரும்பபட்டி மகாலட்சுமி கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கஞ்சிக்கலயங்களுக்கு வேப்பிலை கட்டி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
