ADDED : ஆக 22, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, ஆக.23-
வடமதுரை அருகே மின் ஏற்றத்தாழ்வு பிரச்னையை சீராக்க துவங்கிய புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி 6 மாதங்களாக கிடப்பில் உள்ளது.
வேலாயுதம்பாளையம் சிங்காரக்கோட்டை ரோட்டில் உள்ள எஸ்.குரும்பபட்டி பகுதியில் தற்போது விவசாய, வீட்டு இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சப்ளையில் ஏற்றத்தாழ்வு பிரச்னை உள்ளது.
இதனை சீராக்கும் நோக்கில் அப்பகுதியில் கூடுதலாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பணி துவங்கியது. இதற்கான மின்கம்பங்கள் நட்டு மின்வயர்களும் கட்டி வைக்கப்பட்ட நிலையில் இப்பணி நடக்காமல் கிடப்பில் உள்ளது.
இப்பகுதியில் துவக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர் நிறுவும் பணியை முடித்து சப்ளை பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
