/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வார்டுக்குள் குப்பை வண்டி வருவதே இல்லை அமைச்சர் பங்கேற்ற நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
/
வார்டுக்குள் குப்பை வண்டி வருவதே இல்லை அமைச்சர் பங்கேற்ற நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
வார்டுக்குள் குப்பை வண்டி வருவதே இல்லை அமைச்சர் பங்கேற்ற நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
வார்டுக்குள் குப்பை வண்டி வருவதே இல்லை அமைச்சர் பங்கேற்ற நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
ADDED : மார் 06, 2024 06:39 AM
ஒட்டன்சத்திரம், '' வார்டுக்குள் குப்பை வண்டி வருவதே இல்லை' என அமைச்சர் சக்கரபாணி பங்கேற்ற ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறினர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் திருமலைசாமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எம்.பி., வேலுச்சாமி பங்கேற்றனர்.
கவுன்சிலர்கள் விவாதம்
மகாராணி, தேவி, கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் (தி.மு.க.,): எங்கள் வார்டுக்குள் குப்பை வண்டியே வருவதில்லை. இதனால் குப்பை தேங்கி உள்ளன
அமைச்சர் : எத்தனை குப்பை வண்டிகள் உள்ளன.
ராஜ்மோகன், துப்புரவு ஆய்வாளர்: 14 குப்பை வண்டிகள் உள்ளன. இன்னும் நான்கு குப்பை வண்டிகள் இருந்தால் 18 வார்டுகளுக்கும் தனித்தனியாக குப்பை வண்டிகள் கொடுக்க முடியும்.
அமைச்சர் : குப்பை வண்டி வாங்குவதற்கு உடனடியாக தீர்மானம் நிறைவேற்றுங்கள்.அதுவரை வாடகைக்கு குப்பை வண்டி எடுத்து குப்பையை அள்ளி துாய்மையாக வைத்திருக்க வேண்டும்
ராஜ்மோகன், துாய்ைம ஆய்வாளர்: துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது
அமைச்சர்: தேவையான துாய்மை பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுங்கள்
கண்ணன் (தி.மு.க.,): கோடை காலம் நெருங்கி வருவதால் நகராட்சியில் உள்ள 70 போர்வெல்களை சரி செய்து தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். பழுதான மோட்டார்களை சீரமைக்க வேண்டும்.
சுப்பிரமணிய பிரபு, பொறியாளர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
கனகராஜ் (தி.மு.க.,): எப்போது குடிநீர் விடுகிறார்கள் என தெரிவதில்லை. குடிநீர் வினியோகம் செய்யும் நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர்: கவுன்சிலர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள்.
ஜெயமணி: தெருக்களின் சந்திப்புகளில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
அமைச்சர்: 18 வார்டுகளுக்குள் எந்த எந்த இடங்களில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பதை தெரிந்து உடனடியாக அமையுங்கள்.
தேவி: வார்டில் உள்ள ரேஷன் கடையில் கூரை பெயர்ந்து விழுகிறது.
அமைச்சர்: கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுங்கள்.
அழகேஸ்வரி,ஜெயமணி: எங்கள் வார்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும்.
அமைச்சர்: இடம் தேர்வு செய்யப்பட்டு சொந்த கட்டடம் கட்டித் தரப்படும்.
முகமது மீரான் (காங்.,): சம்சுதீன் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.
பழனிச்சாமி (தி.மு.க.,): வார்டில் பலருக்கு வீட்டு பட்டா இல்லாமல் உள்ளது. வீட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அமைச்சர்: கவுன்சிலர்கள் அனைவரும் வார்டுகளில் உள்ள அடிப்படைப் பிரச்னைகளை எழுதிக் கொடுங்கள். அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள 12 நகராட்சிகள் துாய்மையான நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஒட்டன்சத்திரம் ஆகும். எனவே தெருக்களில் குப்பை தேங்காதவாறு அள்ள வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

