/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எண்ணற்ற புதிய படிப்புகள் ஜி.டி.என்., சேர்மன் பேச்சு
/
எண்ணற்ற புதிய படிப்புகள் ஜி.டி.என்., சேர்மன் பேச்சு
எண்ணற்ற புதிய படிப்புகள் ஜி.டி.என்., சேர்மன் பேச்சு
எண்ணற்ற புதிய படிப்புகள் ஜி.டி.என்., சேர்மன் பேச்சு
ADDED : செப் 05, 2025 02:30 AM

திண்டுக்கல்: ''தற்போது எண்ணற்ற புதியப்படிப்புகள் வந்துள்ளதாக,'' ஜி.டி.என்.,கல்விக்குழுமம் சேர்மன் ரெத்தினம் பேசினார்.
திண்டுக்கல்லில் ஜி.டி.என்.,கல்விக்குழுமம் சார்பில் நடந்த ஜி.டி.என்., காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லுாரி துவக்கவிழா, இன்ஜினியரிங், நர்சிங், ஹோமியோபதி நேச்சுரோபதி மருத்துவம், சட்டம், கலை அறிவியல் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு அறிமுகவிழாவில் அவர் பேசியதாவது :தற்போது ஏ.ஐ., டேட்டா சயின்ஸ், குவாண்டம் இன்ஜினியரிங் என எண்ணற்ற புதியப்படிப்புகள் வந்துள்ளது. மற்ற துறைகளை சேர்ந்த மாணவர்களை காட்டிலும், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு உள்ளது. சிறந்த எதிர்காலத்துக்காக கல்லுாரியில் அடியெடுத்து வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
இன்போசிஸ் துணைத் தலைவர் சுஜித்குமார் பேசுகையில், ''இக் கல்லுாரி ஒரே வளாகத்தில் சட்டம், மருத்துவம், கலை அறிவியல், இன்ஜினியரிங் என எல்லாத்துறை மாணவர்களும் இருப்பது வரபிரசாதம். இங்கு நிறையபேர் ஏழை குடும்ப பின்புலத்தில் இருந்து வந்திருக்கலாம். குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக கல்லுாரி படிப்புக்குள் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கலாம். உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி இந்த அரங்கத்தினுள் மாணவர்களை விடவும் மகிழ்ச்சியாக அமர்ந்திருப்பது பெற்றோர்கள் தான் என நினைக்கிறேன் ''என்றார்.
செல்வி ரத்தினம் தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர் துரை, சட்டகல்லுாரி செயலாளர் வெங்கடேஷ் ,கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன், பதிவாளர் சின்னக்காளை, கல்லுாரி முதல்வர் தீபா, துணை முதல்வர் நடராஜன், கலைக்கல்லுாரி முதல்வர் சரவணன் கலந்துகொண்டனர்.