/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறின 3 கார், 5 டூ - வீலர்கள் தீயில் கருகின
/
ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறின 3 கார், 5 டூ - வீலர்கள் தீயில் கருகின
ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறின 3 கார், 5 டூ - வீலர்கள் தீயில் கருகின
ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறின 3 கார், 5 டூ - வீலர்கள் தீயில் கருகின
ADDED : டிச 20, 2024 01:34 AM

ஒட்டன்சத்திரம்,:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், மூலச்சத்திரத்தில் உள்ள சர்ச் அருகே, அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் ரூபன், 32, தகர ஷெட் அமைத்து கார் சர்வீஸ் ஸ்டேஷன் நடத்தி வந்தார்.
இதை சரியாக நடத்த முடியாததால் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியை சேர்ந்த முஸ்தாக், 25, என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இவர், பாறைகளை தகர்க்கும் சக்தி வாய்ந்த ஜெலட்டின் குச்சிகளை ஷெட்டில் பதுக்கி வைத்திருந்தார்.
ஜெலட்டின் குச்சிகள், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள், ஐந்து டூ - வீலர்கள் தீயில் கருகின.
ஆத்துார் சித்தரைவை சேர்ந்த முகமது ரியாஸ் காயமடைந்தார். ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
அப்பகுதி பொதுமக்கள், சட்டத்தை மீறி தவறு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் தங்கராஜ் பேச்சு நடத்திய பின் மறியல் கைவிடப்பட்டது.
விசாரணை நடத்திய ஒட்டன்சத்திரம் போலீசார் முஸ்தாக், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியை சேர்ந்த முகமது முபீத், 29, மூலச்சத்திரத்தை சேர்ந்த ரிச்சர்ட் ரூபன், 32, மூலனுாரைச் சேர்ந்த கார்த்திக், 32, ஆகியோரை கைது செய்தனர்.
காளாஞ்சிபட்டியை சேர்ந்த அப்துல் ஹக்கீம், சம்சுதீன் காலனியை சேர்ந்த ஷாஜகான் ஆகியோரை தேடி வருகின்றனர்.