ADDED : ஆக 24, 2026 08:23 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை, ஆக.25-
பிரமலை கள்ளர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் மாநில பொருளாளர் இளங்கோ தலைமையில் நிலக்கோட்டையில் நடந்தது. கூட்டத்தில் இச்சமூக மக்களுக்கு ‘டி.என்.டி.,’ என்ற ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி 5000 மனுக்கள் ஒரே நாளில் தமிழக அரசுக்கு அனுப்புவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில செயற்குழு தலைவர் ஆனந்தன், மாநில ஓட்டுனர் பிரிவு தலைவர் மணிகண்டன், இளைஞர் அணி மாநில அமைப்பாளர் தமிழரசன், கூட்டமைப்பு ஆலோசகர் அண்ணாதுரை, மாநில துணை அமைப்பாளர் வீரக்குமார், பிற அணி மாநில தலைவர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
