ADDED : ஆக 24, 2026 08:42 PM
ஒட்டன்சத்திரம், ஆக.25-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கிலோ ரூ.50க்கு விற்ற வெண்டைக்காய் நேற்று விலை சரிவடைந்தது. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, கண்ணனுார் சுற்றியுள்ள பகுதிகளில் வெண்டைக்காய் அதிகம் பயிரிடப்படுகிறது. ஓணம் பண்டிகைக்காக கேரள வியாபாரிகள் அதிகம் கொள்முதல் செய்தனர். இதனால் நேற்று முன்தினம் ஒரு கிலோ வெண்டைக்காய் அதிகபட்சமாக ரூ.50க்கு விற்பனை ஆனது.
நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நேற்று கேரள வியாபாரிகள் மிகக் குறைந்த அளவே கொள்முதல் செய்தனர். இதனால் வெண்டைக்காய் விலை பாதியாக சரிவடைந்து கிலோ ரூ.25க்கு விற்பனையானது.
அதிக விலைக்கு கிடைக்கும் என்று நினைத்து வெண்டையை அதிகமாக பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த விவசாயிகள் விலை வீழ்ச்சி அடைந்ததால் விரக்தி அடைந்தனர்.
