UPDATED : அக் 30, 2026 05:47 PM
ADDED : அக் 30, 2026 05:44 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானல் ஹோம் ஸ்டே அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அசோசியேசன் தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் செயல்களை தவிர்க்க வேண்டும், பசுமையை முன்னெடுக்கும் வகையில் மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும், சுகாதாரமான குடிநீர், உணவு வகைகளை வழங்க வேண்டும்’ என்றார்.
கவுரவத் தலைவர் ராஜ்மோகன், அட்வகேட் சக்திவேல், தலைவர் சுரேஷ் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் திரவியம் வரவேற்றார். தாசில்தார் நந்தகோபால், இன்ஸ்பெக்டர் திருவானந்தம், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அட்வகேட் பாபு நன்றி கூறினார்.
