ADDED : ஜூலை 24, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : இந்தியன் நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவனம் சார்பில் பாகாநத்தம், தென்னம்பட்டி, கொம்பேறிபட்டி பகுதி பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டன. இவற்றில் பங்கேற்ற மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு பயிற்சியாக பல்வேறு விளையாட்டுகள், கிராமிய கலைகள் கற்று தரப்பட்டன. இம்மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா பாகாநத்தத்தில் இசை நிர்வாக இயக்குனர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது.
பயிற்சியாளரான ஸ்ரீவி ,கல்லுாரி பேராசிரியர் சத்யா முன்னிலை வகித்தார். இசை நிறுவன ஆலோசகர் சின்னையா, கொம்பேறிபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் பங்கேற்றனர்.