ADDED : மே 16, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் இலவச கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட இளம் வீரர்களுக்கு சான்றிதழ், விளையாட்டு உபகரணங்கள் ,மரக்கன்றுகள், நலத்திட்டங்களை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வழங்கினார்.
நகர செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு, மாவட்ட பொருளாளர் குப்புசாமி, எம். ஜி. ஆர்., மன்ற மாநில துணைச் செயலாளர் ரவிமனோகரன்,முன்னாள் நகர தலைவர் கோவிந்தன்,மாவட்ட பிரதிநிதி பாரூக், அவைத் தலைவர் ஜான்தாமஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் சதீஷ்குமார், நகர தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் பாலசுப்பிரமணி கலந்து கொண்டனர் .
நகர துணைச் செயலாளர் ஜாபர் சாதிக் வரவேற்றார்.