ADDED : பிப் 08, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி நூற்றாண்டு விழா, ஆண்டு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வாசு மன்னார் தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் மனிஷா முன்னிலை வகித்தார். ஆசிரியை பாண்டிச்செல்வி வரவேற்றார். தலைமை ஆசிரியர் மோகன்தாஸ், வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, ஜெயராணி, எஸ்.எம்.சி., உறுப்பினர் நடராஜன், சவுடீஸ்வரி, தலைவர் மேகலா, டாக்டர் லோகநாதன், வார்டு கவுன்சிலர் கற்பகம் பங்கேற்றனர். ஆசிரியர் நித்தியானந்தம் நன்றி கூறினார்.