ADDED : ஜன 25, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைதி அறக்கட்டளை, சமூக நலத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
அறக்கட்டளை திட்ட இயக்குனர் ரூபபாலன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி வரவேற்றார். அமைதி அறக்கட்டளை திட்ட மேலாளர் சீனிவாசன் , திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா, உதவி தலைமை ஆசிரியர் கணேசன் பேசினார். ஏற்பாடுகளை அமைதி அறக்கட்டளை பணியாளர்கள் புவனேஸ்வரி, திவ்யா, சங்கீதா, மணிமேகலை, ராஜேஸ்வரி செய்திருந்தனர்.