/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு ஆயுள்
/
சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு ஆயுள்
ADDED : அக் 22, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் சாம்ரோகித் , 22. இவர் அதே பகுதி 15 வயது பள்ளி சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் சிறுமியின் உடல்நலம் பாதிக்க சந்தேகமடைந்த பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அதில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது.
இதன் வழக்கு விசாரைணை திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சாம்ரோகித்திற்கு ஆயுள் தண்டனை ,ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.