/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள்
ADDED : ஜன 20, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தத்தில் பழநி பாதையாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி ஒளிரும் குச்சிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நத்தம்ஒன்றிய ஆணையாளர் விஜயசந்திரிகா கலந்து கொண்டு ஒளிரும் குச்சி, மஞ்சள் பைகளை வழங்கினார். தொடர்ந்து இரவு நேரங்களில் சாலையின் ஒரமாக செல்லவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தினார். அலுவலக மேலாளர் நம்பி தேவி, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பாதயாத்திரை பக்தர்கள் அதிகமாக செல்ல தொடங்குவதால் சாலை நெடுகிலும் மின்விளக்குகள், ஆங்காங்கே அன்னதானமும் வழங்கப்படுகிறது.