/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாய் கடித்து இறந்த ஆடு; விவசாயி போராட்டம்
/
நாய் கடித்து இறந்த ஆடு; விவசாயி போராட்டம்
ADDED : மார் 07, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கோதைமங்கலம் அருகே தோட்டத்தில் நாய்கள் கடித்ததால் இறந்த ஆடுடன் விவசாயி தாலுகா அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.பழநி கோதைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 42.
இவரது தோட்டத்தில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள வெறிநாய்கள் ஆட்டை கடித்ததால் ஆடு காயமடைந்தது. ப பழநி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் ஆடு இறந்தது. இதை தொடர்ந்து ஆடுடன் தாலுகா அலுவலக வாயிலில் ராஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டார். அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்க திரும்பி சென்றார்.

