/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தத்தில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
/
நத்தத்தில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : அக் 20, 2025 12:59 AM

நத்தம்: -நத்தம் ஆட்டுச்சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நத்தம் ஆட்டு சந்தையில் திண்டுக்கல், காரைக்குடி, மதுரை, தேனி, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஏராள மானோர் வந்தனர்.
பொதுவாக ஒவ்வொரு வாரமும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விற்பனை நடைபெறும்.
தீபாவளி காரணமாக நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சந்தை கூடியது. ஏராளமான ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரி, வேன்களில் வியாபாரிகளும் வந்து குவிந்தனர்.
அதிக எடை கொண்ட ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், குறைந்த எடை உள்ள ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும் விற்பனை யாகின.
நேற்று மட்டும் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.