/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' அருவியில் விழுந்த பொள்ளாச்சி மாணவர் மாயம்
/
'கொடை' அருவியில் விழுந்த பொள்ளாச்சி மாணவர் மாயம்
ADDED : அக் 20, 2025 12:34 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் அஞ்சுவீடு அருவியில் தவறி விழுந்த பொள்ளாச்சி மருத்துவ மாணவர் மாயமானார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு, கோவையை சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவர்கள், 11 பேர் நேற்று முன்தினம் மாலை சுற்றுலா வந்தனர். இவர்கள் பேத்துப்பாறை அருகே உள்ள அஞ்சு வீடு அருவியை பார்க்க சென்ற நிலையில், சிலர் ஆற்றில் குளித்துள்ளனர். இதில், பொள்ளாச்சியை சேர்ந்த மாணவர் நந்தகுமார் 21, ஆற்றுப்படுகை பகுதியில் தவறி விழுந்தார்.
தீயணைப்பு துறையினர் தேடிய நிலையில், 2வது நாளாக நேற்று மாலை வரை அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து, கொடைக்கானல் பகுதியில் கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மாலையில் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அபாயகரமான இந்த அருவிக்கு செல்வதை தவிர்க்க போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகள் அறிவுறுத்திய போதும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.