ADDED : செப் 06, 2025 04:03 AM

ஒட்டன்சத்திரம்: விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் 224வது நினைவு நாளை முன்னிட்டு விருப்பாச்சியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது முழு உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
கலெக்டர் சரவணன் , ஆர். டி. ஓ., கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், தாசில்தார் சஞ்சய் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், பிரபு பாண்டியன், கோபால் நாயக்கர் சேவா சங்கத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் பெருமாள் சாமி, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், துணைச் செயலாளர் செல்ல காமு, திருமலைசாமி மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் மகேந்திரன், ராமகிருஷ்ணன் முருகன் நாயுடு, தி.மு.க, ஒன்றிய செயலாளர் எஸ். ஆர். கே. பாலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வராஜ், தங்கபாண்டியன், துணைத்தலைவர் கவுரி சரவணன், செந்தில் , மல்லசீலன் கலந்து கொண்டனர்.