/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையால் சுரைக்காய் விலை அதிகரிப்பு
/
மழையால் சுரைக்காய் விலை அதிகரிப்பு
ADDED : ஜன 01, 2024 05:58 AM
ஒட்டன்சத்திரம்: தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சுரைக்காய் விலை அதிகரித்து கிலோ ரூ.10 க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சுரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இப்பகுதியில் அவ்வப்போது பெய்த மழை காரணமாக சுரைக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வரத்து குறைந்து விலை அதிகரிக்கிறது. நவம்பரில் ஒரு கிலோ சுரைக்காய் ரூ.2 க்கு விற்றது. டிசம்பர் தொடக்கத்திலிருந்து விலை படிப்படியாக அதிகரித்து நேற்று ரூ.10க்கு விற்றது. நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த விலையானது 5 மடங்கு அதிகரித்தது.
கடந்த மாதம் சுரைக்காயை விற்க முடியாமல் தவித்து வந்த நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வதாக கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி தெரிவித்தார்.