/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் பஸ் ஸ்டாண்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்:பள்ளி மாணவர்கள் அவதி
/
நத்தம் பஸ் ஸ்டாண்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்:பள்ளி மாணவர்கள் அவதி
நத்தம் பஸ் ஸ்டாண்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்:பள்ளி மாணவர்கள் அவதி
நத்தம் பஸ் ஸ்டாண்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்:பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : பிப் 13, 2024 08:03 PM

நத்தம்:நத்தம் பஸ் ஸ்டாண்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை பின்பக்கமாக இருந்து தள்ளி, பள்ளி மாணவர்கள் அவதி அடைந்தனர்.
மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ், நத்தம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பெரியார் பஸ் நிலையம் இடையே தினசரி சென்று வரும். இந்நிலையில் மாலை நத்தம் பஸ் ஸ்டாண்ட் வந்த இந்த பஸ் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் பழுதாகி பஸ்சை இயக்க முடியாமல் நின்றது. இதனை அடுத்து டிரைவர் மற்றும் நடத்துனர்கள் அறிவுறுத்தல் படி பள்ளி மாணவர்கள் பஸ்சை பின்னால் இருந்து தள்ள, பின் பஸ் கிளம்பி சென்றது.
அரசு பஸ்கள் முறையான பராமரிப்புகள் இல்லாததால் இதுபோன்று அடிக்கடி பழுதாகி நிற்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் அவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பாதித்து வருகின்றனர். மேலும் விபத்து அபாயமும் உள்ளதால் அரசு பஸ்களை முறையாக பராமரிக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.