/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்; தவிப்பில் மாணவர்கள்
/
பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்; தவிப்பில் மாணவர்கள்
ADDED : டிச 13, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் ரோட்டோர பள்ளத்தில் இறங்கி நின்றதால்பயணிகள் , பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
வேடசந்துார் கோவிலுாரிலிருந்து வேடசந்துார் நோக்கி நேற்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது.
பொதுமக்கள் , பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 50க்கு மேற்பட்டோர் அந்த பஸ்சில் வந்தனர்
கொல்லம்பட்டறை அடுத்து வந்த போது குடிநீர் குழாய் செல்வ தற்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் பஸ் சிக்கிக்கொண்டது.
பயணிகள் , பள்ளி கல்லுாரி மாணவர்கள் அரை கி.மீ.,துாரம் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்றனர். போக்குவரத்து தடைபட்டதால்வாகனங்களும் சுற்றிசென்றன.