/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டிராக்டரில் கட்டி இழுத்த அரசு பஸ்
/
டிராக்டரில் கட்டி இழுத்த அரசு பஸ்
ADDED : அக் 03, 2025 03:08 AM

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே அச்சனம்பட்டிக்கு சென்ற அரசு டவுன் பஸ் பழுதடைந்ததால், டிராக்டரில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வெல்லம்பட்டி ஊராட்சி அச்சனம் பட்டிக்கு, அரசு டவுன் பஸ் நேற்று முன்தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. வழியில் பழுதாகி நின்று விட்டது. வேடசந்தூர் பணிமனைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பணிமனையில் 'ரெக்கவரி வேன்' இல்லாததால், அப்பகுதியில் உள்ள ஒரு டிராக்டரில் கட்டி பணிமனைக்கு இழுத்து வந்தனர். இந்த வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இதே பணிமனையைச் சேர்ந்த அரசு பஸ் ஒன்று, திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி வந்த போது காக்காத்தோப்பூர் பிரிவு அருகே, வலது புற பின் சக்கரங்கள் இரண்டும் கழன்று ஓடியது குறிப்பிடத்தக்கது.