/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் காரருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
/
போலீஸ் காரருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
போலீஸ் காரருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
போலீஸ் காரருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ADDED : டிச 02, 2024 05:00 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றிய முன்னாள் போலீஸ்காரர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் ராஜேந்திரன்60. இவர் 2018ல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். இவர் தன் டூவீலரில் பணி முடிந்து நிலக்கோட்டையிலிருந்து வாடிப்பட்டியில்
உள்ள வீட்டிற்கு சென்றார்.
அப்போது திண்டுக்கல் டூ மதுரை சென்ற அரசு பஸ் வாடிப்பட்டி பிரிவு அருகே வந்தபோது ராஜேந்திரன்,மீதுமோதியது. இதில் ராஜேந்திரனுக்கு வலது கால் துண்டிக்கப்பட்டது. ராஜேந்திரன்,இழப்பீடு வேண்டி திண்டுக்கல் தலைமை குற்றவியல்
நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை 2022ல் விசாரித்த நீதிபதி,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்பாதிக்கப்பட்ட ராஜேந்திரனுக்கு ரூ.7.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு
வழங்கவில்லை.
மீண்டும் ராஜேந்திரன்,தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதி,வட்டியுடன் சேர்த்து ரூ.11லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இத்தனை நாட்களாக இழப்பீடு வழங்காததால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு
சொந்தமான அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையிலான நீதிமன்ற ஊழியர்கள் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தேனி டூ திருச்சி செல்ல காத்திருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.