தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அரசு பஸ் சிறைபிடிப்பு

அரசு பஸ் சிறைபிடிப்பு

அரசு பஸ் சிறைபிடிப்பு


UPDATED : அக் 10, 2026 04:52 AM

ADDED : அக் 09, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 04:52 AM ADDED : அக் 09, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிப்பட்டிக்கு நேற்று காலை 8:00 மணிக்கு அரசு டவுன் பஸ் வந்தது. அங்கிருந்து அருகில் உள்ள சின்னகாளிப்பட்டிக்கு புறப்பட்டது. அந்த பஸ்சை வழிமறித்த அஞ்சகுளிப்பட்டி கிராம மக்கள் சின்னகாளிப்பட்டிக்கு சென்று வந்தால் தங்களது வழக்கமான பணிகளுக்கு திண்டுக்கல் செல்ல நேரம் ஆகும். அதனால் அங்கு செல்லக்கூடாது எனக்கூறி ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

சாணார்பட்டி வருவாய் ஆய்வாளர் ரஞ்சித் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்கமான நேரத்திற்கு சற்று முன் அஞ்சுகுளிப்பட்டிக்கு பஸ் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறினர். இதையேற்று பஸ்சை விடுவித்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us