/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இழப்பீடு வழங்காததால் பழநியில் அரசு பஸ்கள் ஜப்தி
/
இழப்பீடு வழங்காததால் பழநியில் அரசு பஸ்கள் ஜப்தி
ADDED : டிச 06, 2024 06:23 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவில் பழநி பஸ் ஸ்டாண்டில் நின்ற அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
2019 பிப்ரவரியில் ஒட்டன்சத்திரம் ஓடைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி 55, வேடசந்துார் மெயின் ரோட்டில் காரில் சென்ற போது வெரியப்பூர் பிரிவு அருகே எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் இறந்தார். இழப்பீடு கோரி அவரது மனைவி மயிலாத்தாள், மகள் சரண்யா, மகன் அருள்செல்வன் பழநி கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணையில் இழப்பீடாக ரூ.25 லட்சத்து 285 ரூபாய் வழங்க கூடுதல் நீதிபதி உத்தரவிட்டார். இதை வழங்காததால் மேல்முறையீடு செய்ய 2024 ஜூலையில் ரூ. 35 லட்சத்து 41 ஆயிரத்து 597 ஐ வழங்க நீதிபதி மலர்விழி உத்தரவிட்டார்.
இதன் பின்பும் இழப்பீடு வழங்காத நிலையில் நீதிமன்றம் உத்தரவில் வழக்கறிஞர் துரை, ஊழியர்கள் பழநி பஸ்ஸ்டாண்டில் நின்ற இரண்டு அரசு பஸ்களை ஜப்தி செய்தனர்.