ADDED : ஜூலை 02, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
250 -க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வு மூலம் தேர்வாயினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தொடக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜாராம் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., சக்திவேல், தாசில்தார் ஆறுமுகம்,முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம்,நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்பாட்சா முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.