/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வசதிகள் இல்லா அரசு கல்லுாரி; மாணவர்கள் அவதி
/
வசதிகள் இல்லா அரசு கல்லுாரி; மாணவர்கள் அவதி
ADDED : ஜன 08, 2024 04:50 AM
கன்னிவாடி : கன்னிவாடி அரசு கலை கல்லுாரிக்கு போதிய கட்டட, குடிநீர் வசதி இன்றி மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இங்கு 2022ல் ஏற்படுத்தப்பட்ட இந்த கல்லுாரிக்கென கட்டட வசதியின்றி கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்படுகிறது.
இரண்டாம் ஆண்டு முடிந்து 3ம் ஆண்டுக்காக வரும் மாணவர்களுக்கான கூடுதல் வகுப்பறை வசதி இல்லை. போதிய குடிநீர் ,வேதியியல், கணினி துறை ஆய்வகங்கள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
சந்துரு (விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர், ரெட்டியார்சத்திரம்):
மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப பேராசிரியர்கள் நியமிக்கவில்லை. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், கரூர், பெரியகுளம் உள்ளிட்ட பிற கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மாற்றுப்பணி மூலம் இங்கு பணியாற்றுகின்றனர் என்றார்.