/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாடிக்கொம்பு பெருமாள் கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முடிவு
/
தாடிக்கொம்பு பெருமாள் கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முடிவு
தாடிக்கொம்பு பெருமாள் கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முடிவு
தாடிக்கொம்பு பெருமாள் கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முடிவு
ADDED : ஆக 21, 2025 11:57 PM
திண்டுக்கல்: தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில் ,கங்கைகொண்ட சோழபுரம், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வரிசையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலையும் சுற்றுத்தலமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் கலைநயம் மிக்க சிற்பங்கள், ஒரே கல்லிலான சிற்பங்கள், நுணுக்கமான சிற்ப கலை உள்ளிட்ட பல விசேஷங்களை கொண்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலை சுற்றுலா தலமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தாடிக்கொம்பு சவுந்தர ராஜ பெருமாள் திருக்கோயில் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு பெருமை சேர்க்கும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகி விடும் என திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி தெரிவித்தார்.