ADDED : ஏப் 15, 2025 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்: ஸ்ரீ ராமபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி 55. திண்டுக்கல் வி.எஸ்.கோட்டை மார்க்கம்பட்டி கூட்டுறவு சொசைட்டியில் செயலாளராக உள்ளார்.
நேற்று மாலை ஸ்ரீராமபுரத்திலிருந்து நடை பயிற்சி சென்று வீடு திரும்பியபோது பழநியிலிருந்து வேடசந்தூர் வழியாக எரியோடு சென்ற டூவீலர், மோதியதில் சம்பவ இடத்திலேயே தண்டபாணி உயிரிழந்தார்.
டூவீலரை ஓட்டி வந்த பழநி நெய்க்காரபட்டி உதயா 20 காயமடைந்தார்.
வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.