/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் அரசு அலுவலர் சங்க மாநாடு
/
பழநியில் அரசு அலுவலர் சங்க மாநாடு
ADDED : நவ 25, 2024 05:04 AM
பழநி : பழநியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்க நுாற்றாண்டு விழா,மாநாடு மாவட்ட தலைவர் ஜோதி முருகன் தலைமையில் நடந்தது. மாநிலத் தலைவர் அமிர்தகுமார், மாவட்ட செயலாளர் கருணாகரன், மாநில சட்ட ஆலோசகர் கவிவீரப்பன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில தலைவர் சக்திவேல் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். ஆய்வக உதவியாளர்களுக்கு பிற பணிகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சாலை பணியாளர்களுக்கு நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பழநியாண்டவர் தொழில்நுட்பக் கல்லுாரியில் மாலை நேர கல்லுாரி துவங்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டக் கல்லுாரி துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.