UPDATED : நவ 05, 2026 11:59 PM
ADDED : நவ 04, 2026 08:48 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊழியர் விரோத, எதேச்சதிகார போக்கை கூட்டுறவுத்துறை பதிவாளர்கள் கைவிட வேண்டும், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாவட்ட தலைவர் முபாராக் அலி தலைமை வகித்தார். செயலாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் ஜான்பாஸ்டின் டல்லஸ், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலத் துணைத்தலைவர் வீரகடம்பகோபு, மாநிலச் செயலாளர் ஜெசி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
