/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 08, 2024 01:49 AM

திண்டுக்கல்: வருவாய்துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முபாரக்அலி தலைமை வகித்தார். நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில தலைவர் முருகானந்தம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சுதந்தி பேசினார்.
பேரூராட்சி ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் மகாலிங்கம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஜெசி, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜமாணிக்கம் முன்னலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் ராசாத்தி நன்றி கூறினார்.

