நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: குளத்துார் அரசம்பட்டி நாராயணன் சுந்தரபுரி வேலு ஆகியோர் காமாட்சிபுரத்தில் செயல்படும் கல் குவாரியில் பணிபுரிந்தபோது கடந்தாண்டு செப்.14ல் அங்கு ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தனர்.
இவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி தொகையை அரசு அறிவித்திருந்தது.
இதற்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் அனுப்பப்பட்ட காசோலையை விபத்தில் இறந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் வழங்கினார். தாசில்தார் சுல்தான் உடனிருந்தார்.

