/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இருளில் மூழ்கிய அரசு மருத்துவமனை
/
இருளில் மூழ்கிய அரசு மருத்துவமனை
ADDED : அக் 31, 2025 02:03 AM

பழநி:  பழநி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த வார்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
பழநியில் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டடம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆண்கள் வார்டு பகுதி தகர சீட் மூலம் வார்டு அமைத்து இடமாற்றம் செய்யப்பட்டது.
நேற்று அப்பகுதியில் தற்போது கட்டட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த இடத்தில் இருந்த நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.  இங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்விசிறிகள், மின் விளக்குகள் எரியவில்லை அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

