/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாவட்டத்தில் 19.50 லட்சம் வாக்காளர்கள் திருத்த பட்டியல் தயாரிப்பு பணி நவ.,ல் துவக்கம்
/
திண்டுக்கல் மாவட்டத்தில் 19.50 லட்சம் வாக்காளர்கள் திருத்த பட்டியல் தயாரிப்பு பணி நவ.,ல் துவக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 19.50 லட்சம் வாக்காளர்கள் திருத்த பட்டியல் தயாரிப்பு பணி நவ.,ல் துவக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 19.50 லட்சம் வாக்காளர்கள் திருத்த பட்டியல் தயாரிப்பு பணி நவ.,ல் துவக்கம்
ADDED : அக் 31, 2025 01:59 AM
திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியல் தயாரிக்கும் பணி நவ.4 ல் துவங்குகிறது என கலெக்டர் சரவணன் கூறினார்.
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 2026ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது.  இது தொடர்பாக கலெக்டர் பேட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் பணி நவ.4 முதல் டிச.4 வரை நடக்கிறது. மாவட்டத்தில் வாக்காளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 19 லட்சத்து 34 ஆயிரத்து 447பேரின் விவரங்கள் சரிபார்க்கும் பணி வீடு, வீடாக சென்று துவங்கப்படுகிறது.
இதற்கு, 2002ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை அடிப்படையாக எடுத்துக்கொண்டு, அக்.27 தேதியின்படி தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலோடு ஒப்பிட்டு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியல் தயாரிக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 17, 18 வயது பூர்த்தியடைந்தவர்களிடமும் விவரங்கள் பெறப்பட்டு புதிய வாக்காளர்களாக இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தகவல், சரிபார்ப்புக்காக ஆதார் கார்டை மக்கள் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் எந்த ஆவணங்களையும் வாக்காளர்கள் இணைத்து கொடுக்க வேண்டியதில்லை. மாவட்டத்தில் மொத்தமுள்ள 2 ஆயிரத்து 107 ஓட்டுச்சாவடிகளில், 2 ஆயிரத்து 124 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஒத்துழைப்போடு 7 தொகுதிகளிலும் ஒரு மாதம் நடக்க உள்ள இந்த பணியில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மாற்றங்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு ஓட்டுச்சாவடிகள் நிலை அலுவலர்கள், முகவர்கள், கண்காணிப்பாளர்கள் என அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும். டிச.9ல் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர்களின் தற்காலிக பட்டியல் வெளியிடப்படும். இதன் மீதான ஆட்சேபனைகள், திருத்தங்களுக்கு அவகாசம் அளிக்கப்படும்' என்றார்.

