/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழக அரசு வஞ்சனை செய்கிறது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
/
தமிழக அரசு வஞ்சனை செய்கிறது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தமிழக அரசு வஞ்சனை செய்கிறது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தமிழக அரசு வஞ்சனை செய்கிறது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
ADDED : பிப் 08, 2025 05:24 AM
பழநி: ''தமிழக அரசு தமிழக மக்களுக்கு வஞ்சனை செய்து வருவதாக''பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
பழநி வந்த வானதி சீனிவாசனை திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன், முன்னாள் தலைவர் கனகராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ஆனந்த், நகர தலைவர் ஆனந்தகுமார், அரசு தொடர்பு பிரிவு செயலாளர் கருப்புசாமி வரவேற்றனர்.
சண்முக நதியில் வழிபட்டப்படி கிரி விதி வழியாக காவடிகளுடன் வந்த அவர் பாத விநாயகர் கோயிலில் வழிபட்டார். படிப்பாதை வழியாக முருகன் கோயில் சென்று தரிசனம் செய்தார்.
அவர் கூறியதாவது: தைப்பூசத்தை முன்னிட்டு பா.ஜ.,வின் நிர்வாகிகள் மாலை அணிந்து யாத்திரையாக வந்திருக்கிறோம். நாடு வல்லரசு நாடாக மாற ஆன்மிக பலம் மிகவும் அவசியம்.
சனாதன தர்மத்தில் எந்த வேறுபாடும் இல்லை. சண்முகா நதிக்கு படித்துறை இல்லை. தமிழக அரசு முருக பக்தர்களுக்கான மாநாடு நடத்தி முருக பக்தர்களோடு இருக்கிறோம் என நாடகம் நடத்துவதை போல தோன்றுகிறது. பழநி கோயிலுக்கு யானை வாங்குவதற்கு தமிழக அரசு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
பாலியல் வன்கொடுமை பள்ளிகளில் மட்டுமல்ல. கல்வி வளாகங்கள் ,பொது இடங்களில் அதிகமாக நடைபெறுகிறது. மாநில அரசு அதில் பாராமுகமாக இருக்கிறது. தமிழக அரசு மக்களுக்கு வஞ்சனை செய்வது, பாதுகாப்பு இல்லாத சூழலை ஏற்படுத்துவது.
இதற்கு மேலாக தங்கள் குடும்ப நலனை கவனிப்பதில் தான் அக்கறை உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே செய்யலாம். அதை செய்யாமல் மத்திய அரசு மீது பழி போடுகின்றனர். ரயில்வே திட்டங்கள் பழநிக்கு கிடைக்க பா.ஜ., உறுதுணையாக இருக்கும் என்றார்.