ADDED : ஜூன் 23, 2025 04:37 AM
வடமதுரை வடமதுரை பஸ் ஸ்டாண்ட் அருகில் வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட்டது. ஓட்டு மேற்கூரை கொண்ட இக்கட்டடம் மிகவும் பழமையானது. 2007ல் கனமழைக்கு கட்டடத்தின் ஒரு பகுதி சுவர் சரிந்தது. இதனால் வி.ஏ.ஓ., அலுவலகம், வடக்கு ரத வீதியில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.
அங்கும் போதிய இடவசதியில்லை. தென்னம்பட்டி வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் பழுதடைந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எரியோட்டில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்குரிய ஓட்டுக்கூரையிலான கட்டடம் சிதலமடைந்ததால் திண்டுக்கல் ரோட்டிலுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு இடம் மாறியுள்ளது. மற்ற சில துறைகளை போல வருவாய்த்துறை கட்டடங்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த முடியாது என்பதால் இந்நிலை இருப்பதாக வி.ஏ.ஓ., சங்கத்தினர் கூறுகின்றனர். வி.ஏ.ஓ, அலுவலகங்களுக்கு கட்டட வசதி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.