ADDED : செப் 29, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் அரசு அலுவலர் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் கார்மேகம், மாவட்ட துணைத் தலைவர் வேல்முருகன், தலைவர் ஜோதி முருகன், செயலாளர் கருணாகரன், துணை தலைவர் மணிகண்டன் பேசினர். மாவட்ட தலைவர் நடவடிக்கைகளை அங்கீகரித்தல், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,
சாலை பணியாளர்களின் பணியினை வரைமுறைப்படுத்தி உரிய ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்ட கிளைச் செயலாளராக ரஞ்சித், பொருளாளராக சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.