/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: திண்டுக்கல்லில் மாணவர்கள் 7 பேர் காயம்
/
அரசு பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: திண்டுக்கல்லில் மாணவர்கள் 7 பேர் காயம்
அரசு பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: திண்டுக்கல்லில் மாணவர்கள் 7 பேர் காயம்
அரசு பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: திண்டுக்கல்லில் மாணவர்கள் 7 பேர் காயம்
UPDATED : மார் 07, 2025 09:16 PM
ADDED : மார் 07, 2025 05:43 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் சந்தைபேட்டை ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4 ம் வகுப்பு கட்டடத்தின் கூரை பெயர்ந்து விழுந்து 7 மாணவர்கள் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 1 மாதத்திற்கு முன்பு மராமத்து பணிகள் நடந்தபோதிலும் கட்டடம் இடிந்து விழுந்தது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் சந்தைப்பேட்டை ரோடு பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 1 முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர். 400க்கு மேலான மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள வகுப்பறை கட்டடங்கள் 2009ல் தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகள் மாணவர்கள் பயன்பாட்டில் இருந்தது. வகுப்பறையில் பல இடங்களில் பெயர்ந்து விழுதல், கட்டடங்களில் சேதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தது.
திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திற்கு இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அவர்கள் பள்ளியை ஆய்வு செய்து 3 மாதங்களுக்கு முன்பிருந்து பள்ளியில் சேதமான சுவர்கள் சீரமைக்கப்பட்டு, பெயின்ட் அடிப்பது போன்ற மராமத்து பணிகள் நடந்தது. அதேபோல் 4ம் வகுப்பு கட்டடத்திலும் 1 மாதத்திற்கு முன் மராமத்து பணிகள் நடந்தது.
இன்று( மார்ச் 07) வழக்கம் போல் வகுப்புகள் நடந்த நிலையில் மதியம் 4ம் வகுப்பில் 40க்கு மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். அப்போது திடிரென வகுப்பறையின் கூரை இடிந்து மாணவர்கள் தலையில் விழுந்தது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த முகமது சகீல், ஆண்டோ, கவுதம், அகிலேஷ், தருண், அஜய் உள்ளிட்ட 7 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
உடனே அச்சமடைந்த ஆசிரியர்கள் காயமடைந்த மாணவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், தெற்கு போலீசார் பள்ளியில் குவிந்தனர். இதனால் அப்பகுதிகள் முழுவதும் பரபரப்பான நிலையாக இருந்தது. மாணவர்களின் பாதுகாப்பை பள்ளி நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதவி செயற்பொறியாளர் சஸ்பெண்ட்
திண்டுக்கல் சந்தைப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மதியம் கூரை இடிந்து விழுந்து 7 மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பேசும் பொருளானது. இதை அடுத்து அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கினர். இந்த நிலையில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் தியாகராஜனை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
லாப நோக்கத்தோடு பணிகள்
நடுநிலைப்பள்ளியை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறியதாவது: இந்தப் பள்ளியில் ரூ. 1 கோடி மதிப்பில் சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. லாப நோக்கத்தோடு செயல்பட்டதால் தான் இந்த விபத்து நடத்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், மாநகராட்சி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சீனிவாசன் பேசத் தேவையில்லை
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூற வந்த அமைச்சர் பெரியசாமி கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் ஆரம்பப் பள்ளி, மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்காக பழைய கட்டடங்களை சீரமைப்பதற்காகவும், புதிய கட்டடங்களை கட்டுவதற்காகவும் அதிக நிதியை கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் தற்பொழுது பெரும்பாலும் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில் ஏற்கனவே அதில் இருக்கக்கூடிய கூரைகள் முன்பு கட்டடம் சீலிங்கில் பழுது ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பழுது நீக்கப்பட்டுள்ளது. அதில் பிளாஸ்டிக்கில் சரியாக ஒட்டப்படவில்லை. இதனால் அது கீழே விழுந்து மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் தற்பொழுது நலமாக இருக்கிறார்கள் எந்த பாதிப்புகளும் இல்லை.
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மிகவும் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. பழைய ஆட்சி காலம் போல இல்லை. தி.மு.க., ஆட்சியில் பள்ளி கட்டடங்களை உறுதி மிக்க கட்டடங்களாக வராண்டாவிலேயே பள்ளிக்கூடம் நடத்தும் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. பள்ளியின் தரம் குறித்து புகார்கள் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்லூரி வளாகங்கள் போல் பள்ளி வளாகங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் அனைத்துமே உறுதியாக கட்டப்பட்டுள்ளது. அன்பழகன் பெயரில் அதிகமான நிதி ஒதுக்கி நடுநிலை, உயர்நிலை, ஆரம்ப பாடசாலை அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிறிய தவறு நடந்துள்ளது. விசாரணை செய்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.