/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேர்வு
/
பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேர்வு
ADDED : மே 06, 2025 06:27 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 2025 - 2027 ஆண்டிற்கான மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தலைவராக பிரான்சிஸ் பிரிட்டோ, செயலாளராக செல்மா பிரியதர்சன், பொருளாளராக செந்தில்குமார், சட்டச் செயலாளராக குருராமன், தலைமையிடத்து செயலாளராக தாம்சன், செய்தித் தொடர்பு செயலாளராக முத்துப்பாண்டி, மகளிரணி செயலாளர்களாக வடிவுக்கரசி, ரதிதேவி, துணைத் தலைவர்களாக சுவக்கின் அமல்ராஜ், துக்கையண்ணன், பரக்கத்துல்லா இணைச் செயலாளர்களாக வடிவேல், வெள்ளையன், செந்தில்குமார், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக ஜெகதீஸ்குமார், ஷாஜஹான், ரமேஷ்குமார், அலெக்ஸ், முருகன், தங்கராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.