/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

ADDED : டிச 12, 2024 05:40 AM
திண்டுக்கல்: ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அரசு ஊழியர் கூட்டரங்கில் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். செயலர் ஜோசப் சேவியர் , பொதுச்செயலர் பேட்ரிக்ரெய்மாண்ட் பேசினர்.
மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.