/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மொபட் மீது லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி
/
மொபட் மீது லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி
ADDED : நவ 17, 2025 01:51 AM
வத்தலக்குண்டு: மொபட் மீது டிப்பர் லாரி மோதியதில் தாத்தா, பாட்டி, பேத்தி பலியாகினர்; பேரன் படுகாயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன், 60. இவரது மனைவி ஜோதி, 52. பேரன் வர்ஷன், 12; பேத்தி வர்ஷினி, 9. நான்கு பேரும் மொபட்டில், உசிலம்பட்டியில் நடந்த காதணி விழாவில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நேற்று மாலை, 5:00 மணிக்கு விருவீடு சாந்திபுரம் விலக்கு இடையே சென்ற போது, கிராவல் மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரி நேருக்கு நேர் மொபட் மீது மோதியதில் காத்தவராயன், ஜோதி, வர்ஷினி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
வர்ஷன் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் பலியானதையடுத்து, தெப்பத்துப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

