ADDED : பிப் 18, 2024 01:21 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அட்யுதா பப்ளிக் பள்ளி 6ம் வகுப்பு மாணவி சனாதனா கனடாவின் வடதுருவ பகுதியிலுள்ள கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டாகிளாஸ்க்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதற்கான சாண்டாகிளாஸ் தாத்தாவின் பதிலாக உலக பயணத்தை முடித்து இன்றுதான் திரும்பினேன். உங்கள் வாழ்த்து கடிதம் மகிழ்வை தந்தது. அதை எங்கள் வீட்டு சுவற்றில் ஒட்டி பாதுகாக்கிறேன். உங்களுக்கும் வாழ்த்துக்கள் என வந்துள்ளது.
கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் வாழ்த்து பெற்ற மாணவி சனாதனாவை பள்ளி செயலாளர்கள் மங்களராம், காய்த்ரி மங்களராம் , முதன்மை முதல்வர் சந்திரசேகரன், ஆசிரியர்கள் ஞானபிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, பத்மநாபன், ராஜசுலோக்சனா, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மேலாளர் ஜான் கிரிஸ்டோபர், பிரபு, அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.