நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீரனுார்; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கீரனுார் வாகீஸ்வரர் கோயில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உணவு வழங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி, பழநி சப் கலெக்டர் கிஷன் குமார், தொப்பம்பட்டி ஒன்றிய தலைவர் சத்திய புவனா, ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் கார்த்திக், பழநி கோயில் துணை கமிஷனர் வெங்கடேசன் கலந்து கொண்டனர்.

