/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதிய பஸ் ஸ்டாண்டுக்கு பூமி பூஜை
/
புதிய பஸ் ஸ்டாண்டுக்கு பூமி பூஜை
ADDED : ஜன 28, 2025 05:52 AM
வேடசந்துார்: வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்ட நிலையில் நேற்று அதே இடத்தில் ரூ.ஒரு கோடி 19 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார்.
பேரூராட்சி தலைவர் மேகலா, மாவட்ட பேரூராட்சிகளின் முதன்மை பொறியாளர் வெற்றிச்செல்வி, செயல் அலுவலர் மரிய அந்தோணி யூஜின், டி.எஸ்.பி., பவித்ரா, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா, பேரூர் செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், முன்னாள் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, ஒன்றிய துணைச் செயலாளர் கவிதாமுருகன், நிர்வாகிகள் மருதபிள்ளை, மாரிமுத்து, சுப்பிரமணி, மணிமாறன், நாகப்பன் பங்கேற்றனர்.

