/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மார்ச் 22ல் குரூப் 4 பயிற்சி வகுப்பு துவக்கம்
/
மார்ச் 22ல் குரூப் 4 பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : மார் 17, 2024 05:50 AM
ஒட்டன்சத்திரம்: ''காளாஞ்சிபட்டி கருணாநிதி நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் மார்ச் 22 முதல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக '' கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: காளாஞ்சிபட்டி கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் குரூப் 4 பணியிட போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மார்ச் 22 காலை 9:30 மணிக்கு துவங்க உள்ளது. தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் இடைவெளி இன்றி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு தினமும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.

